என் கைபேசி
இருப்பது ஒரே ஒரு நோக்கியா கைபேசி.
கடந்த ஏழு வருடமாக அதுவும் நானும் இணைபிரியா நண்பர்கள்.
என்னுடைய சிரிப்பு, அழுகை, கோபம் என எல்லாவற்றையுமே பார்த்திருக்கு.
கடந்துவந்த பாதையில் ஏற்பட்ட காயங்கள் யாவும் அறியும்.
வீணாய் நான் கழித்த நாட்கள்,
தமிழில் ஆர்வம் மிகுதியாக வாசிக்கத் தொடங்கிய நாட்கள்,
முகநூலில் கரைந்த நாட்கள்,
நல்ல நண்பர்களைக் கண்டுகொண்ட நாட்கள்,
எழுதத் தொடங்கிய நாட்கள் என என் வாழ்நாட்களில் நான் பக்குவம் அடைந்தது என் கைபேசி மூலம் தான்.
இப்போது அது பழுதானாலும் முன்பு போல் இயங்காவிடிலும்
இயன்றவரை முகநூல் காணவும் சில கருத்துகளைப் பகிரவும் பெரிதும் உதவியாக உள்ளது நல்ல நட்பாக.
என் உழைப்பில் முதன் முதலாக வாங்கிய கைபேசி.
பிஞ்சு கைகளில் கருப்பு மை படிய இயந்திரங்களைத் துடைத்து எண்ணெய் ஊற்றி கஷ்டப்பட்ட நாட்களுக்கு கைப்பலனாக கிடைத்த கைபேசி.
பலருடைய கிண்டல்களையும் நக்கல்களையும் பரிசாய் வாங்கித் தந்த கைபேசி.
எந்நிலையிலும் கைவிடாத கைபேசி.
என்னால் பெரிதும் கஷ்டப்படும் கைபேசி.
அளவான கைபேசி.
செலவை அடக்கியாளும் கைபேசி.
நன்றி சொல்கிறேன் உனக்கு, என் கைபேசி,
இன்னும் கொஞ்ச நாள் என்னோடு இருந்திடு கைபேசி.