அப்பா
அப்பா......
நான் பிறந்த நாள் தான்
உனது நம்பிக்கையோ
நீ தான் என்றுமே
என் தன்னம்பிக்கை
பாதம் முதல் உச்சி வரை
என்னை
முத்த மழையில் நனைத்தாய்
எந்த வேதனையிலும் ........
பல முறை
தவறி விழுந்தது என்னவோ
நான்
வலித்தது உனக்கா ......
நடையாய் நடந்து
நடை பழக்கினாய்
நான் நிமிர்ந்து நடக்க......
பட நாயகனை பார்த்து மகிழ்ந்தேன்
திரை அரங்கினுள்
உண்மையான கதாநாயகன் நீ
அருகில் இருந்தும்........
உடைகள் தந்தாய் பல
உன் கிழிந்த ஆடையை
கூட மாற்ற நினைக்காமல்... ...
நினைவு தெரிந்த
நாளில் இருந்து
வாயை கட்டி வயித்த கட்டி
உழைத்தாய்
நான் வயிறார வேண்டி........
எனக்கான வழியை
உருவாக்கினாய்
உன் வலிகள் பலவற்றை
புதைத்து
ஒரு வலியை
கூட உணரவில்லை
நீ இருக்கும் வரை.......
தியாகிகளை பற்றி
பாடம் படித்த நான்
உன் தியாகம் பற்றி
கற்றுக் கொள்ளவில்லை.....
கடவுளிடம் தினம் பிராத்தித்த
எனக்கு
உன்னை வணங்க
தெரியாமல் போனது ஏன்
கடவுள்கள் எல்லாம் தந்தையின் வடிவில் தான்
என்று புரிந்து கொள்வோம் நாம் ..........
எனக்காக நீ
உழைத்தாய்
எந்த
பலனை காண .........
உன் கடமையை நீ
சரியாக செய்து விட்டாய்
என் கடமையை ??????????????/