அளவில்லா கற்பனைகள் வேண்டா
"நிலா நிலா ஓடி வா.
நில்லாமல் ஓடி வா.."
ஏப்பா! நிலாவிற்கு தான் கால்கள் இல்லையே!
பிறகெப்படி ஓடி வரும்?
அதானே! எப்படி ஓடி வரும்? கிழக்கிருந்து மேற்கே எப்படி நகர்கிறது?
பரந்த அண்டவெளியில் மிதந்து நகர்கிறது!
அப்போ!
நிலா நிலா மிதந்து வா.
நில்லாமல் மிதந்து வா..
மரங்களுக்கு மேலாக மிதந்து வா...
மல்லிகைப் பூ கொண்டு வா.
ஏய் நிறுத்துப்பா! நிலாவிற்கு கைகள் இருக்கின்றனவா?
இல்லை! அதுக்கென்ன?
அதுக்கென்னவா? கைகள் இல்லாத நிலாவால் மல்லிகைப் பூவை எப்படி பறித்துக் கொண்டு வர முடியும்?
அதானே எப்படி கொண்டு வர முடியும்?
நான் கேட்டதையே என்கிட்ட கேட்கிறாயா?
சூரிய ஒளி உள்வாங்கி பிரதிபலிப்பது போல் மல்லிகைப் பூவை ஈர்த்துக் கவர்ந்து உன்னைச் சூழ கொண்டு வா.
ஆம். இப்போ சரியா படி!
நிலா நிலா மிதந்து வா.
நில்லாமல் மிதந்து வா..
மரங்களுக்கு மேலாக மிதந்து வா...
சூரிய ஒளி உள்வாங்கி பிரதிபலிப்பது போல் மல்லிகைப் பூவை ஈர்த்துக் கவர்ந்து உன்னைச் சூழ கொண்டு வா....
பிஞ்சில் விதைக்கப்பட வேண்டியவை அளவில்லா கற்பனைகள் அல்ல.
உண்மையின் வழியில் சாத்தியமான நடைமுறைகள்.
விதைக்கத் தொடங்குவோம்.
எதிர்கால விதியை மாற்றி எழுதுவோம்.