அப்பா என்னும் உற்ற நண்பன்

கணக்கிலடங்கா உதவிகள் செய்தவர்...

உழைப்பின் வலிமையை உணர வைத்தவர்...

வாழ்வில் ரசித்த கதாநாயகன் அவர்...

என் எதிர்காலத்துக்காக தன் ஓய்வை நினைத்துப் பார்க்காதவர்...

வழி தவறும் நேரங்களில் சரி செய்தவர்...

பணத்தின் மதிப்பை கண்டிதங்களால் புரிய வைத்தவர்...

உறவுகளின் இலக்கணம் சொல்லிக் கொடுத்தவர்...

எல்லாவற்றையும் பகிர நம்பிக்கை தருபவர்...

தன் தோள்களில் நிறுத்தி உலகை காண்பிப்பவர்...

அன்பை செயல்களால் நித்தமும் தருபவர்...

கடவுளின் தூதனாக நம் வாழ்க்கையை கட்டியமைப்பவர்...

தடுமாறும் நேரங்களில் தாங்கிப் பிடிப்பவர்...

தேவைப்படும் நேரங்களில் அனுபவத்தை ஆலோனையாக வலிக்காமல் தருபவர்...

முகபாவனையில் நம் பிரச்னையை கவனித்து தீர்க்க முயற்சிப்பவர்...

தோல்வியின் நேரங்களில் நம்பிக்கை விதைப்பவர்...

நாம் உடையும் நேரங்களில் கண்ணீர் வடிப்பவர்...

நம் பசியை தாங்க முடியாதவர்...

மற்றவர்கள் முன்பு நம்மை உயர்த்திக் காட்டுபவர்...

அவர் தோள் வரை வளர்ந்ததும் நம் சகோதரனாகி விடுவார்...

எழுதியவர் : ஜான் (18-Jun-18, 3:09 am)
பார்வை : 1970

மேலே