ஹைக்கூ கவிஞர் இராஇரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

பழைய செருப்பின்
மதிப்புக்கூட இல்லை
பிணத்திற்கு !

குறைந்தது கூட்டம்
திரையரங்கில்
இணையத்தில் படம் !

இணைந்தன இரு துருவங்கள்
இல்லை இனி போர்
நிலவும் அமைதி !

முகம் பார்த்தது
நிலவு
பனித்துளியில் !

இரண்டும் உண்டு
முள்ளும் மலரும்
ரோசாச்செடியில் !

நாட்டு நடப்பு
நல்லவர் மகன் குடிகாரனாக
குடிகாரனை மகன் நல்லவனாக !

சிந்தியுங்கள்
சோலைகள் அழித்து
சாலைகள் எதற்கு ?

ஏற ஏற
ஏறுது இரத்தக்கொதிப்பு
பெட்ரோல் விலை !

இறக்குவேன் என்கிறார்கள்
ஏறியதும் ஏற்றுகிறார்கள்
விலைவாசி !

மாற்றிச் சொல்லுங்கள்
மக்குகளுக்காக நான்
மக்குகளால் நான் !

கோடிகளில் நடக்குது
கொள்ளை
விடியவில்லை ஏழைக்கு !

இல்லவே இல்லை
நாத்திகர்
சிறையில் !

அறிவதில்லை
விழுதுகள்
விதையின் உழைப்பு !

விலங்குகளைக் காக்க
உண்டு நீலச்சிலுவை
மனிதர்களுக்கு ?

தொழாவிட்டாலும்
அழ விடாதீர்கள்
உழவர்களை !

விதை விதைக்காமல்
கல் விதைக்கின்றனர்
விளைநிலங்களில், !

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (18-Jun-18, 8:56 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 158

மேலே