ஓவியமும் அதன் வண்ணங்களும்
வானவில்லினும்
அதிக நிறங்கள்
சுமந்திருந்தது அது...!
சூரியன் மேற்க்கில்
மேலெழும்ப முயற்ச்சித்தது
நதி் பின்னோக்கி ஓடியது
பறவைகள் வானில்
நடந்து கொண்டிருந்தன...
புரியாத அந்த
ஓவியங்களின் வண்ணம்
மட்டுமே தேங்கியது
என் எண்ணத்தில்...
சிலர் மனதும்
என்னிடம் மீதமிருக்கும்
சிலர் நினைவுகளும்...