வெயில் பொழுது
வெளியே செல்ல நினைத்தேன்
வெயில் என்னை மிரட்ட
வீட்டினுள் நான் இருக்க...
தொலைக்காட்சி நான் பார்க்க
தொல்லை தரும் நிகழ்ச்சிகள்
தொடர்ந்து என்னை தாக்க...
கைபேசியில் வரும் செய்திகள்
கொஞ்ச நேரம் பொழுது கழிக்க
கடுப்பாகி போக..
தூக்கம் வரும் நேரத்தில்
தூங்கலாம் என்று நினைக்கும் போது,
தொடர்ந்து என்னை விட்டு செல்லும் மின்சாரமே...
மனமில்லையா உனக்கு,எனக்கு மகிழ்ச்சி தர...!!!
என்ன நான் செய்வெனோ...!!!
இந்த வெயில் காலத்தை கடக்க...!!!