மாமலை சபரியிலே மணிகண்டன்
மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்'.
மாற்றங்கள் அருளி
கவலைகளை போக்கும் சந்நிதானம்.
மலர் போன்ற மனம் கொண்டவன்
ஐயனின் தரிசனம் கண்டு
தேக சுகமடைந்து இன்பம்
காண வாருங்கள்
எளியோனின்,வலியன் இவன்
எக்காலத்திலும் காக்கின்ற கருணை வாசன்
வளம் பொங்க அருள்கின்ற அமிழ்தானவான்
எந்தனுக்கு உதவிடும் செழுமை நாதனே
ஐயப்பனே
உன் திருமேனியை
கண்ணீர் வழிய தொழ வேண்டும்.
உந்தன் கற்பூர ஒளியிலே
உன்னுடைய முகம் கண்டு
சுகங்கள் பல அடைய வேண்டும்
எண்ணரிய பிறவிதனின்
மகிமை புரியவேண்டும்
உன் உந்துதலால்
திருவடியை தொட்டுவிட
உன் கருணை என்றும்
கிடைக்க வேண்டும்
பிறவி பாவங்கள் எல்லாம் தீர்ந்துவிடவேண்டும் ஐயனே
வரம் தந்துவிட வந்துவிடு ஐயனே
உயிரோடு உயிராக வாழும் நான்.
உள்ளே இழுக்கும் சுவாசமாக
உன்னில் வந்துவிடவே
அருள் வேண்டி வந்தேன் ஐயனே
உன் சந்நிதானம் தன்னில்