துரு மனம்

#மனம்
#தமிழினியன்
சிந்தனைகள் இல்லாத
மனம் ஆசையில்
எங்கோ சிதைந்து
தான் உள்ளது,
சிதைந்த மனம் எதையோ
தேடுகிறது,
தேடுகிறதென்றால்,
தேடியதை அடைய
விரும்பலாம்
இல்லை ஏமாறலாம்,
ஏமாற்றத்தை மனம்
என்றும் எங்கும்
விரும்புவதில்லை,
அளவற்ற ஆசைகளே
எதையும்
அடைய ஏங்கும் ஆசையுங்
கொள்ளும்,
அடைய விரும்பும் மனம்
மாண்டுதான் போகும்,
மனம் ஒரு இரும்பாக
இறுமாப்பு கொண்டாலும்,
காலத்தின் வேகத்தில்
தருமதேவனும் வாயுநீரின்
வழிப்புகுவான்,
கறையேறி
கபிலநிறம் படிந்து
கரைந்து மண்ணில்
புதைந்து போகும் மனம்,
மனதில் அடக்கத்தோடு
ஆசை கொண்டு,
அன்பாக இருக்க
சிந்தனை தெளிவு பெரும்.