நிலாவின் அழகை கண்டு கவிதையால் காதலித்த கவிஞன்

பொழுதுபோக்குகள் பலவிருந்தும்
பளிச்சென்று தெரியும் உன்னை
கண்டப்பின்னே கவர்ந்ததால்
கவிதையை சொல்ல நினைத்தேனே...!
உயரத்தில் இருக்கும் உன்னை
இரவின் வேளையில் இனிமையாக சிரிப்பதை கண்டு ரசித்தேனே...!
பௌர்ணமியில் பளிச்சென்று தெரியும் நீ,
அமாவாசை அன்று அழகை காட்ட மறுப்பதெனோ???
வெண்மை நிறத்தில் வெளிச்சத்தை காட்டிய நீ,
வெயில் வேளையில் வெட்கப்பட்டு போனதென்ன...!!!
உன்னை சுற்றி குட்டிகுட்டி வெளிச்சங்கள் பலவிருந்தும்
நீ தனிமையில் தவிப்பதென்ன?
உன் அழகை கண்டு நான் தடுமாறி போனதென்ன...!!!
தடுமாற்றத்தில், நான்...