நட்பை தாண்டிய காதல்
வாழ்வில்,
தோல்விகள் பல கண்டும்
தோழியாய் நீ உறுதுணையாக இருந்தாய்...!
உன் அன்பில் என்னை ஈர்க்க,
என் மனமோ உன்னை
உயர்ந்த இடத்தில் வைக்க...
கண் எதிரே நீ போகையில்
கண்டுக்கொள்ளாமல் நான் இருக்க− யார்
கண்பட்டதோ தெரியவில்லை
கலைந்து போன கனவைப் போல
நம் நட்பு காற்றில் கறைந்துபோனதென்ன...!!!
பலப்பேர் சுற்றிருந்தும்
பாசத்தை காட்டிய உன் நட்பை
பறிப்போக விடுவேனோ?
பரிதவிக்கும் என் மனதை
பார்க்காமல் தவிர்ப்பாயா
பாவப்பட்டு மன்னிப்பாயா...!!!