குலதெய்வம்
அன்புசெல்வம் எப்போதும் போல காளியேமேடு சென்று தன் குலதெய்வமான “கருப்பையா சாமியை” வணங்க வெறும் கர்பூரங்களுடன் செல்வது வழக்கம்.
இப்படியே வெறும் கற்பூரம் மட்டும் ஏற்றி விட்டு, வணங்கி வருதல் குடும்பத்திற்கு சிறப்பு அல்ல என அவரது மனைவி சத்தியா பல முறை கூறியும் அன்புசெல்வம் கேட்டபாடில்லை. நம்ம சாமி எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம் என்று மறுத்து பேசிக் கொண்டிருந்தார்.
சில நாட்கள் கழித்து....
ஒரு நாள் அந்தி சாயும் நேரம், சுமாராக எழு மணி இருக்கும்,
அன்புசெல்வம் குல தெய்வத்தின் ஊர் வழியே சென்றார், எப்போதும்போல வெறும் கற்பூரங்களுடன் சென்றார். மேகம் மழைவருவது போல இருந்தது, மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டிருந்ததால் அந்த கிராமமே இருளில் மூழ்கியிருந்தது. ஆதலால் கோவிலுக்கு வெளியே நின்று வணங்கிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதுநாள் வரை கோவிலுக்கு சென்று, கடவுளை வணங்காமல் வந்ததே இல்லை, ஏன் இப்படி நடந்து இன்று , என்று அன்புசெல்வம், நடந்தவற்றை தன் மனைவியிடம் கூற, இது என்னவோ எனக்கு சரியாக படவில்லை, சாமி ஏதோ சொல்ல நினைக்கிறது என்றாள் சத்தியா. நாளை நீயும் என்னோடு வா என்று சொல்லிவிட்டு உறங்கிவிட்டார்கள் இருவரும்.
அன்புசெல்வமும், சத்தியாவும் அடுத்த நாள் வெறும் கர்பூரங்களுடன் கோவிலுக்கு சென்றார்கள். அவர்களுக்கு முன்னவே இரண்டு லாரி நிறைய மக்கள், வெகு தொலைவிலிருந்து, குல தெய்வ வழிபாடு செய்வதற்காக கூட்டமாக வந்திருந்தார்கள். அங்கேய இருவரும் அமர்ந்து நடப்பவற்றை கவனித்தனர். பல அபிசேகங்கள், படையல்கள், பூஜை என கோவிலே கலை கட்டி இருந்தது. சத்தியா இதை போல தான் நாமும் வணங்க வேண்டும், எத்தனைமுறை நான் சொன்னேன், ஒருதடவையாவது நீங்கள் கேட்டீர்களா??? இப்போது தான் புரிகிறது என்று தன் தவறை உணர்ந்த அன்புசெல்வம் காத்திருந்து , கடவுளை தரிசித்து வீடு திரும்பினார் வெறும் கற்பூரம் ஏற்றி.
சில குடும்ப பிரச்சனைகள் தீர்ந்த பின், நாமும் இது போல குல தெய்வ வழிபாடு செய்யலாம் என முடிவு செய்தார்கள்.
அன்புசெல்வம் மனம் தெளிவடைந்தது,.
சில நாட்கள் கழித்து....
கற்பூரங்கள் காசுகள் ஆகின, காசுகள் பூஜை பொருட்கள் ஆனது, அனைத்து உறவினர்களுடன் வழிபாடு நடக்க கர்பூர ஜோதியில் மகிழ்ச்சியாக பிரகாசித்தது அனைவரது முகமும்.