காதலர்கள் கவனத்திற்கு பகுதி 10

உன்னை வசிகரிப்பதற்காய்
நான் எடுத்துக் கொண்ட
எல்லா மெனக்கெடல்களையும் விட
அரியதும் பெரியதும்தான்
உன் உள்ளூரப் புன்னகையும்
உதட்டுச் சுழிப்புகளும்

என் காதலை நட்பெனப்
புரிந்துகொண்டாய்
உன் நட்பைக் காதலெனப்
புரிந்துகொண்டேன்
நான் தவறாய் புரிந்துகொண்டதாய்
சண்டையிடுகிறாய்
தவறு உன்னிலும்தானே
நீயும்தானே தவறாகப் புரிந்துகொண்டாய்

என்ன விந்தை இது
மஞ்சள் வானில் கருப்புநிலா
உன் உள்ளங்கையில் மச்சம்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (22-Jun-18, 1:35 pm)
பார்வை : 150

மேலே