ஜூலி என் தோழி
ஜூலி என் இனிய தோழி
உன்னைப் பிரிந்து
என் தூக்கம் தொலைந்ததடி !
எங்கிருக்கிறாயாடி எப்படி இருக்கிறாயாடி ?
வகுப்பறையில் நீ நுழைந்துவிட்டால்
எல்லோருக்குமே ஜாலி
வகுப்பே கலகலக்கும் !
நான் தேர்வில் பெயிலான போது
நானும் பெயிலாகவில்லையே
என்று வருந்திய ஒரே உலகமகா தோழி நீ தானடி !
ஒரு ஜூலையில் உன் பிறந்த நாளில்
நீ மெழுகு ஊதி கேக் வெட்டி
நீ பாடிய பாடல் இன்னும்
காதில் ஒலிக்குதடி
பியானோவில் உன் விரல் தடவி
சிறகில்லா தேவதை போல் நீ இசைத்த இசை
இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லையடி !
எங்கிருக்கிறாய் என்னுயிர் தோழியே !
என்றும் உன் நினைவுடன் ....
தென்காசி ஜான்சி ,The Queen .