மருமகள்
சொல்லும் வேலையைத் தட்டாமல் செய்யும் ஊதியமில்லா வேலைக்காரி....... மனதின் இரணங்களை யாரும் அறியாமல் இரகசியம் காக்கும் சாமர்த்தியகாரி.... அழுது செத்தாலும் புட்டிப்பாலையே பருக வேண்டும்.... தாய்ப்பால் அங்கு மறுக்கப்படும் இரகசியம் அறியா பச்சிளம் பிள்ளை.... தேவைகள் மறந்தும் தன்னிகரற்று வாழும் அன்றில் பறவை..... வசைகளை வாழ்த்துகளாய் வாங்கிக் கொள்ளும் வஞ்சகக்காரி...... எத்தனை நாள் தொடர்வாய் மனதில் இழந்த புன்னகையை உதட்டில் மட்டும்..........