இசைத்தமிழ்

இசையினை மொழியுடன் இணைத்து வைத்தார்
..... எல்லோர்க்கும் செவிவழியே விருந்து வைத்தார்
இசைநூல்கள் பலவற்றை செய்து வைத்தார்
..... இன்பத்தை அதிலேயே புகுத்தி வைத்தார்
திசையெங்கும் இசைத்தமிழை பரவச் செய்தார்
..... தேன்தமிழை இசையாலே பருகச் செய்தார்
இசையினைத் தூணிலுமே புகுத்தி வைத்தார்
..... இசையோடு இசையாக இன்பம் கொண்டார்

இன்பம்த ரும்வழியை அறிந்து முன்னோர்
..... இசையினிலே இலக்கியத்தை செய்தா ரன்றோ!
இன்னிசையின் நுட்பத்தை அறிந்தே நல்ல
..... இசைக்கருவி பலவற்றை செய்தா ரன்றோ!
இன்னிசையைக் கேட்ககேட்க நெஞ்சில் உள்ள
..... இன்னல்கள் எல்லாமே தீரு மன்றோ!
என்னருமை இசைத்தமிழே நாளும் உன்னை
..... யான்கேட்க மனதிலின்பம் பொங்கு மன்றோ!

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:15 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 712

மேலே