பாசப்பறவைகள்

அனைத்து உறவுகளிலும் சிறந்த உறவாம்
அண்ணன் தங்கை உறவு - என்றும்
அன்பை பொழியும் உறவு - நாங்கள்
பாசம் என்னும் வானிலே உயர
பறந்து செல்லும் பறவைகள் - அங்கு
பாடித் திரியும் பாசப்பறவைகள்

அன்பெனும் கடலில் என்னைத் தள்ளி
ஆழம் அறிய வைப்பாள் - பாச
வலையால் என்னை ஈர்ப்பாள் - என்தங்கை
மாறாத குணமுடன் வெள்ளை மனமுடன்
வாழ்வில் கிடைத்த வரமே - என்னை
மகிழச் செய்வாள் தினமே

துன்பம் என்னை சூழ்ந்திடும் போது
தோழியாக மாறி வருவாள் - என்
துயரை நீக்க வருவாள் - என்னைத்
தாக்கும் இடரிலிருந்து என்னைக் காக்க
தாயாய் மாறி விடுவாள் - என்
தலைக்கு மடியை தருவாள்

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:37 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 6284

மேலே