இந்தியா ஒரு வியாபார நாடு
இந்தியா
ஒரு வியாபார நாடு ...
இங்கே
ஒவ்வொரு மாநிலத்திற்கும்
தனி தனி சட்டம் பொருந்தும் ...
-
இந்தியா
ஒரு வியாபார நாடு ...
-----
கவர்னர் ஆசையோடு - சிலர்
அரசியல் சங்க மனசாட்சிப்படி - பலர்
சட்டப்படி - எப்போதாவது ???
தீர்ப்புகள் வழங்கப்படும் ....
-
இந்தியா
ஒரு வியாபார நாடு ...
-----
தரகு கமிஷனுக்காக
விற்கப்பட்ட மனிதம் ...
விசும்பினால்...
தேச துரோகமாக்கப்படும் ...
-
இந்தியா
ஒரு வியாபார நாடு ...
-----
சாயத்தொழில்
நறுமணமாக்கப்படும் ..
விவ 'சாய ' தொழில்
நாற்றமாக்க பாடு படும் ...
-
இந்தியா
ஒரு வியாபார நாடு ...
----
ரோட்டையல்ல ...
சொந்த காட்டை மறித்தாலும்...
ஏற்றி நசுக்கப்படும் ...
செய்தியானால் ...
நிச்சயம்
இழப்பீடு கொடுக்கப்படும் ...
-
இந்தியா
ஒரு வியாபார நாடு ...
----
போராட்டத்தை ...
வன்முறையாக்கி போராட
காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் ..
-
இந்தியா
ஒரு வியாபார நாடு ...
----
வஞ்சகமில்லாமல்
லஞ்சம் பெறுவது
தார்மீக உரிமையின்
வெளிப்பாடென போற்றப்படும் ...
-
இந்தியா
ஒரு வியாபார நாடு ...
-----
இங்கு
உயிர் வாழ்வது...
உரிமையல்ல...
காலத்தின் கட்டாயம் ....
--
இந்தியா
ஒரு வியாபார நாடு ...
ம கண்ணன்