கற்பனையில் உதித்த காதலி

கற்பனையில் அழகாக உதித்தே - என்றன்
... கவிதைக்கு கருவாக வந்தாள் - இன்ப
கற்கண்டு தருகின்ற சுவையெல் லாம்தன்
... கனியிதழின் மூலமாக தந்தாள்; பேசும்
சொற்களிலே தேன்கலந்து சுவைக லந்து
... துயரெல்லாம் தீர்த்துவைத்தாள்; எமக்கு நீயே
உற்றதுணை என்றுரைத்து அவள்தம் காதல்
... உள்ளுணர்வை அழகாக வெளிக்கொ ணர்ந்தாள்

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:51 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 98

மேலே