வள்ளி கொடியும் வான் கோள்களும்

வள்ளிக்கொடி வான்
கதிரவனுக்கே ஒளியேற்றும்
கண்களை கொண்ட
கலைநயம் மிக்க …………ஞாயிறு நீ

தேய்பிறையும் வளர்பிறையும்
இல்லாத தேனீக்களும் தின்னத்துடிக்கும்
செவிகள் கொண்ட திங்கள்..........நீ

பல லட்சம் கோடிகள்
செலவு செய்து பலநாடுகள்
ஆய்வுகள் மேற்கொள்ளாத அழகிய
செவ்விதழ்களைகொண்ட
செவ்வாய் நீ.....

மானுடத்திற்கே அறிவுபுகட்டும்
மதிநுட்பங்களை கொண்டு
செய்யப்பட்ட யாருமறியாத
எந்தன் இளமையறிந்த
அறிவன். நீ ....

எல்லையற்ற அழகு எல்லாம்
எல்லா நாட்களும் உன்னை
கண்டு வியக்கும்
வியாழன் நீ....

கோள்களெல்லாம் உன்னை
கண்டு குழந்தைகளை போல
குதித்து விளையாடும்
வெள்ளி நீ

காலங்காலமாய் புவியெங்கும்
போர்க்கடவுளாய் எங்கள்
பரம்பரை வணங்கும் கொள்ளை
காரி ……..நீ

எழுதியவர் : (26-Jun-18, 9:49 pm)
சேர்த்தது : பேரரசன்
பார்வை : 67

மேலே