அவளே அனைத்தும்

காலை விழிப்பின் பொழுதிலே
உன்னை அருகில் காண்பதேன்
கோடி முத்தங்கள் தருவதற்கா...

மாலைக் களைப்பின் கடைசியிலே
உந்தன் மடியினில் இடம் தருவதேன்
விரல்கள் கொண்டு தலை கோதவா...

இரவுத்தூக்கம் இன்புறுவதற்கே
இடையினில் இடம் தருவதேன்
இரவும் கொஞ்சம் நீளவா....

மீண்டும் விடியும் பொழுதிலே
மீண்டு எழ மறுப்பதேன்
இன்னும் நெருக்கம் கூடவா...

எழுதியவர் : பர்ஷான் (27-Jun-18, 12:23 pm)
சேர்த்தது : பர்ஷான்
Tanglish : avale anaitthum
பார்வை : 481

மேலே