சைபர் செக்யூரிட்டி என்றால் என்ன

சைபர் செக்யூரிட்டி என்பது இணைய திருட்டை தடுக்கும் ஒரு வேலையாகும். உதாரணமாக திருடர்கள் இருக்கிறார்களே அவர்களை தடுக்க காவல் துறை இருப்பது போல, ஹேக்கர்களை / ஹேக்கிங் தடுக்க பயன்படுவது சைபர் செக்யூரிட்டி ஆகும். அதாவது இன்டெர்னட் போலீஸ் ஆகும்.

இந்த போலீசை எந்த அரசாங்கமும் நியமிக்கது. மருத்துவர், பொறியாளர், வடிவமைப்பாளர் போல இதுவும் ஒரு வேலையாகும். இன்றைய தொழில் நுட்ப உலகில் தொழில் முறை போட்டிக்காகவும், தனிப் பட்ட பகைக்காகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கிலும், இணைய திருட்டு நிகழ்கிறது, இந்த இணைய திருட்டு மூலம் ஒருவரின் தொழில் முடக்கப் படலம், ஒருவரின் அந்தரங்க விஷயங்கள் வெளிப் படுத்தப் படலம், அல்லது மேலும் பல அசம்பாவிதங்கள் நிகழக் கூடும்.

மட்டுமல்லாது பல்வேறு சமூக விரத / சட்ட விரோத செயல்களும் நடக்கிறது. இவ்வாறான சம்பவம் நடந்து விட்டால் மீள்வதென்பது குதிரைக்கு கொம்பாகும். அவ்வாறான பிரச்சனைகள் நடக்கும் முன்பே தடுக்க பயன் படுவதும், நடந்து விட்டால் அவற்றிலிருந்து மீள பயன்படுவதும் சைபர் செக்யூரிட்டி ஆகும்.

நீங்கள் எங்காவது வெளியூருக்கு செல்லும் போது திருடர்கள் நுழையாமல் இருக்கு வீட்டை பூட்டி செல்வது போல, உங்களது தொழில் நுட்ப சமாச்சாரங்கள் திருட்டு போகாமல் பாதுகாப்பதாகும். கைபேசி, கணினி, ஆன்லைன் கணக்குகள், இணையதளம், ஈமெயில், சமுக வலைத்தளம், என எல்லா இடத்திலும் சைபர் செக்யுரிட்டியின் சேவை மிகவும் தேவையாகும். மட்டுமல்லாது தவிர்க்க முடியாததுமாகும்.

நீங்கள் உங்களது கைபேசி, கணினி, சமூக வலைத்தளம், மின்னஞ்சல், போன்றவற்றை பாதுகாக்கவும், சரியான முறையில் கையாளவும், ஹேக் செய்யப் படுவதிலிருந்து பாதுகாக்க தவறாமல் படியுங்கள் "சைபர் காவலன்" இணைய தளம்.

எழுதியவர் : ஹாஜா (27-Jun-18, 1:10 pm)
சேர்த்தது : ஹாஜா
பார்வை : 262

மேலே