குட்டி பாடல்

உயிரின் அடி வரை 

அனல் மழை தெளித்தாய்

உடலும் இருதயம்

துரும்பென இளைத்தேன்

மேகம் கிழிக்கும் 

மின்னலைப் போல்

என் இதயம் கிழித்தாய்

என்னவளே......!

தாகம் தீர்க்கும் நீரென நான்

எனைக் குடித்து முடித்து 

சென்றவளே....!!


இதயத்தில் துடிக்கும் 

உன் பெயரை 

எதைக் கொண்டு அழிப்பேன்

என் உயிரே...!!!

என் இமைகளை வருடும்

உன் நினைவை 

எதை எண்ணி மறப்பேன் 

என் உலகே....!!!

இருட்டினில் மறையும்

நிழல் என நீயும் 

கரைந்தது ஏனடி பெண்ணே!

இருப்பினும் என் நெஞ்சம்

உனை மட்டும் நினைப்பது

ஏனடி கண்ணே..!!!


அடி சாதல் என்ற போதும்

உயிர் காதலை நான் 

விடமாட்டேன் ...!

உன் காலடி மண்ணையும்

பிறர் மிதிக்கவும் 

விடமாட்டேன்....!


ஏன் தான் நீ என்னை 

பிரிந்தாயோ..?

நான் அழ மாட்டேன் 

என்று நினைத்தாயோ...??

என் விழிகள் நனையாமல்

வழியும் கண்ணீரை 

கனவில் வந்து நீ துடைப்பாயோ...???


(உயிரின் அடி வரை)


யாரிடம் அனுமதி 

வாங்கிக்கொண்டு

நாம் கடற்கரை மணலில்

பாதங்கள் பதித்தோம்...?

வேரிடம் அனுமதி 

வாங்கிக் கொண்டா

பூக்களும் கிளையில் 

பூக்கிறதா...??

உன்னோடு தானே

என் வாழ்க்கை என்று

தினந்தோறும் நானும்

கனா நூறு கண்டேன்

இன்றெனோ உந்தன் 

வாழ்வென்ற ஒன்று 

என்னோடு இல்லை

என்றான போதும்

உனை மட்டும் தானே

உயிராக நினைத்தேன்...!!


கண்,விழிக்கும் முன்னமே

உன் முகம் கேட்குமே

வழி,தொடங்கும் முன்னமே

உன் பாதம் கேட்குமே

நான் பதில் என்ன 

சொல்வேனடி 

அன்பே!

மரணத்தின் மதில்சுவர் 

தாண்டி குதித்திடவா நெஞ்சே!


அன்று மரத்தடி நிழலில்

உன் மடி சாய்ந்தேன்

இன்று நிழலும் இல்லையடி

நீயும் இல்லையடி ...!!


என் வாசம் 

பறித்த பூவே!!!

உன் திருமண நாளன்று

என் உயிரை உன் மேல் 

உதிர்த்துப் போனேனடி

உன் கழுத்தில் ஏறிட்ட 

மூன்று முடி 

என் மூச்சை 

நிறுத்திப் போனதடி

நீ இல்லாது என் வாழ்வோ

செல்லறித்துப் போனதடி...!!!


(உயிரின் அடி வரை)

_________________________

 _கவிமலர் யோகேஸ்வரி

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (27-Jun-18, 11:33 pm)
Tanglish : kutti paadal
பார்வை : 50

மேலே