வெற்றி பெறுவதின் நோக்கம்
வாழ்க்கை என்பது பலருக்கும் புதிராகவே இருந்து வந்துள்ளது. அதிலும் வெற்றி பெறுவது ஒனறே
குறிக்கோள். ஆயினும் எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் வெற்றி மட்டுமே கிடைப்பதில்லை.
கம்பன் கூறியதுபோல துன்புளது எனினன்றோ சுகமுளது. வாழ்க்கைப்
பயணத்தில் வலது கால் துன்பம் எனக்கொண்டால் அதனைத்தொடரும் இடதுகால் இன்பம் என்றனர் நம் முன்னோர்கள்.
இனபமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை என
எவ்வளவு அழகாக உணர வைத்து
உள்ளனர். ஆண்டவனிடம் அருள் வேண்டி வழிபடுபவன்கூட சுகத்தை
மட்டுமே வேண்டுகிறான்.பிறரது
துன்பம் தீர வேண்டுவோரும் உண்டு. உணர்வு தொடர்பான ஒன்பது சுவைகளில் சமனிலை என
ஒன்றும் உண்டு. அதாவது மனதால்
இன்பதுன்பங்களைச் சமமாகப்
பாவிப்பது ஆகும். எது எப்படி
நிகழ்ந்தாலும் இலட்சியப் பயணத்தில் வெற்றி பெறுவதுதானே நோக்கமாகும்.
வெற்றியின் ரகசியம் முயற்சி
வெறுமனே அமர்ந்தால் இகழ்ச்சி
உழைப்பும் உண்மையில் பயிற்சி
ஊரெங்கும் அனுபவச் சுழற்சி
தொட்டது துலங்கினால் மகிழ்ச்சி
தொடர் முயற்சிதான் நமது எழுச்சி
வெல்லட்டும் எனமனம் சொல்லட்டும்
வெற்றியே நோக்கமாக அமையட்டும்
புலவர் களந்தை. மணியன்.சிறுமுகை. கோவை மாவட்டம்.8667245375