Pulavar Kalanthai Manian - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Pulavar Kalanthai Manian
இடம்:  Sirumugai.. COIMBATORE
பிறந்த தேதி :  01-Oct-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Apr-2018
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  3

என்னைப் பற்றி...

முதுகலைதமிழாசிரியர்
(தனியார் பள்ளி)
அநுபவம் 28 ஆண்டுகள்
பத்திரிகை நிருபர்
தமிழ் & ஹிந்தி பண்டிதர்
தமிழ் பேச்சாளர்..எழுத்தாளர்..நாடக நடிகர்..சமூக ஆர்வலர்

என் படைப்புகள்
Pulavar Kalanthai Manian செய்திகள்
Pulavar Kalanthai Manian - பகவதி லட்சுமி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2018 3:16 pm

அடிக்கடி கடந்தகால கீறல்கள் விடாமல் சண்டையிடுகிறது.. கோபம் என்னை அழிக்கிறது.. பாசம் வைத்திருந்தவள் ஏசி விட்டாரே என.. பேசவேண்டும் என்று தோன்றுகிறது.. அவர்கள் சொன்ன வார்த்தைகள் மறக்கவில்லை.. அவை பேசவேண்டாம் என்று தடுக்கிறது..!!! என் செய்வேன் இந்நிலையில்..!!

மேலும்

ஆழம் இல்லாததால் தான் இந்த கேள்வியே என் யோசிக்க வைத்தீர்கள்.. நன்றி 09-Jul-2018 8:17 am
அறிந்தோ அறியாமலோ பேசி விடுவோம். ஆனால் பேசிய பின்னர் கவலைப்படுவோம்.. உண்மை.. கருத்திற்கு நன்றி 09-Jul-2018 8:16 am
நல்ல அறிவுரை.. நிச்சயம் செய்கிறேன்.. கருத்திற்கு நன்றி 09-Jul-2018 8:15 am
கோபம் மிகவும் மோசமான குணங்களில் ஒன்று. தீய குணங்கள் அதிகம் தீமையைத் தான் தரும் என நாம் அறிந்ததால் தான் இக்கேள்வியே எழுந்துள்ளது. மனைவி மீது கோபம் வந்தால் அங்கே அவளை காதலியாக எண்ணிப்பாருங்கள்.கோபம் மறையும்.மகன்மீது கோபம் வந்தால் அவனை நம் தந்தையாகவும்..மகள் மீது கோபம் வந்தால் தாயாகவும் மானசீகமாக எண்ணுங்கள்.கோபமும் பாசமாகும்.நேசமாகி இன்பம் பெருகக் காரணமாகும். புலவர் களந்தை மணியன்.. சிறுமுகை 08-Jul-2018 7:31 am
Pulavar Kalanthai Manian - மாலினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2018 11:30 am

கனவுகளை நம்பலாமா கூடாதா

மேலும்

நம் ஆழ்மன எண்ணங்கள் தான் கனவுகள்.. அவற்றை ரசிக்கலாம் அது என்னை பொறுத்தவரை ஸ்.ஜே. சூர்யா பாணியில் இருக்கு ஆனா இல்லை அந்த கதை தான்... அதுவே நம்பினால் மனம் ஒருவித பதட்டமான மகிழ்ச்சி அடையும்.... நம்பவில்லையென்றால் கனவுகளின் கவலையே இருக்காது .......! 17-Jul-2018 12:18 pm
அனைவருக்கும் நன்றி...பிராய்டு பற்றிய குறிப்புகள் கிடைக்கும் அவரவர் சுய அனுபவம் சார்ந்து என்று நினைத்தேன் தோஸ்த்.... 09-Jul-2018 11:29 pm
நான் இங்கு விடை சொல்ல வரவில்லை, எனக்கு தெரிந்த சில விளக்கங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கனவு. நினைவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் கலவை. எங்கு தொடங்கியது? எவ்வாறு முடிந்தது? சாத்தியமா? முழுதாக ஞாபகம் உள்ளதா? உணர்வுகளுக்கு செவி கொடுப்பது முக்கியம் ஆனால் தெளிவில்லாத எதையும் முழுதாக நம்பக்கூடாது 09-Jul-2018 6:20 pm
கனவுகள் ஆழ்மனதில் பதிந்த நினைவுகளையும் நிகழ்கால குழப்பங்களையும் எதிர்கால ஆசைகளையும் குழைத்தெடுத்து வண்ணம் பூசி ஜாலம் காட்டும். மனதை சஞ்சலப்படுத்தும் கனவுகள், நிஜத்தில் நாம் மறைக்க நினைக்கும் பயமாகவோ குழப்பமாகவோ இருக்கலாம். அச்சமயம் மனதை திடமாக்கும், ஒருமுகப்படுத்தும் முயற்சிகளை செய்யலாம். யார் மீதும் வன்மம் இருந்தால் மறக்கலாம். அவ்வகையில் கனவுகளை நம்பலாம். 09-Jul-2018 4:55 pm
Pulavar Kalanthai Manian - Pulavar Kalanthai Manian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2018 9:59 am

வாழ்க்கை என்பது பலருக்கும் புதிராகவே இருந்து வந்துள்ளது. அதிலும் வெற்றி பெறுவது ஒனறே
குறிக்கோள். ஆயினும் எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் வெற்றி மட்டுமே கிடைப்பதில்லை.
கம்பன் கூறியதுபோல துன்புளது எனினன்றோ சுகமுளது. வாழ்க்கைப்
பயணத்தில் வலது கால் துன்பம் எனக்கொண்டால் அதனைத்தொடரும் இடதுகால் இன்பம் என்றனர் நம் முன்னோர்கள்.
இனபமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை என
எவ்வளவு அழகாக உணர வைத்து
உள்ளனர். ஆண்டவனிடம் அருள் வேண்டி வழிபடுபவன்கூட சுகத்தை
மட்டுமே வேண்டுகிறான்.பிறரது
துன்பம் தீர வேண்டுவோரும் உண்டு. உணர்வு தொடர்பான ஒன்பது சுவைகளில் சமனிலை என
ஒன்றும் உண்டு. அதாவது மனதால்
இன்பதுன்பங்

மேலும்

Pulavar Kalanthai Manian - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2018 11:24 am

அன்பிற்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாடு?
அதை பிறர் காட்டும் எண்ணங்களை எவ்வாறு கண்டறிவது ?

மேலும்

உன் கேள்வியின் நோக்கம் புலப்படுகிறது தங்கையே. அதற்கான பதில் இதோ.. அன்பு ஆசை இரண்டுமே காதலில் உண்டு. ஆனால் அன்பிற்கு முன்னுரிமை தருபவரே வாழ்க்கைக்கு உற்ற துணையாயிருப்பார். ஊரறிய திருமண பந்தத்தில் இணையும் வரை உன்னவர் ஆசைக்கு அணையிடுவாரெனில் அங்கே அளவு கடந்த அன்பு நிறைந்திருக்கும். ஏனெனில் உன்னை சங்கடப்படுத்தும் எந்த காரியத்தையும் அன்பு விரும்பாது. 09-Jul-2018 5:25 pm
நன்றி சகோதரரே ! 06-Jul-2018 3:36 pm
அன்புக்கு எதையும் எதிர்பார்க்காது... அன்பு தன்னை புரியாதவர்களைக் கண்டு வருத்தப்படும்... அன்பு ஒருபோதும் நிறம் மாறாது... ஆசை எதிர்பார்ப்புகளைத் திணிக்கும்... ஆசை தனக்கு வேண்டியதை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லும்... சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆசை தன்னை நிறம் மாற்றிக்கொள்ளும்... 06-Jul-2018 1:25 am
பழகப் பழக்கத்தான் அவரது நோக்கத்தை தூய தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் .பயில் தொறும் பண்புடையாளர் நட்பு என்று சொல்வார் வள்ளுவர். காதலுக்கு இந்த முறை சரிப்படாது . ஒருவரை நன்றாக அறிந்து கொள்ளாமல் காதல் வயப்படுவது இந்தக் காலத்தில் சரியில்லை . LOVE AT FIRST SIGHT என்பதெல்லாம் இந்தக் காலத்திற்கு உதவாத கவிதை வரிகள்.தோற்ற வசீகரங்கள் கானல் நீராகப் போக வாய்ப்புண்டு. சமூக வலைத்தள நட்பு காதலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள் . 04-Jul-2018 3:48 pm
Pulavar Kalanthai Manian - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2018 8:35 pm

வாழ்க்கை
பெற்றவர் இட்ட பிச்சைதானோ
வாழ்க்கை
பரமேஸ்வரன் தந்த பாக்கியமோ
வாழ்க்கை
சுற்றமும் நட்பும் தந்த சுகந்தானோ
வாழ்க்கை
சுகதுக்கம் பகிர்ந்த சுந்தரி தானோ
வாழ்க்கை
விதிவசம் சிக்கிய விபரீதந்தானோ
வாழ்க்கை
வெந்ததைத்தின்றே சாவதுதானோ
வாழ்க்கை
அடைந்ததைப் போற்றும்
அற்புதமே அழிவில்லாத வாழ்க்கை.

மேலும்

Pulavar Kalanthai Manian - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2018 9:59 am

வாழ்க்கை என்பது பலருக்கும் புதிராகவே இருந்து வந்துள்ளது. அதிலும் வெற்றி பெறுவது ஒனறே
குறிக்கோள். ஆயினும் எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் வெற்றி மட்டுமே கிடைப்பதில்லை.
கம்பன் கூறியதுபோல துன்புளது எனினன்றோ சுகமுளது. வாழ்க்கைப்
பயணத்தில் வலது கால் துன்பம் எனக்கொண்டால் அதனைத்தொடரும் இடதுகால் இன்பம் என்றனர் நம் முன்னோர்கள்.
இனபமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை என
எவ்வளவு அழகாக உணர வைத்து
உள்ளனர். ஆண்டவனிடம் அருள் வேண்டி வழிபடுபவன்கூட சுகத்தை
மட்டுமே வேண்டுகிறான்.பிறரது
துன்பம் தீர வேண்டுவோரும் உண்டு. உணர்வு தொடர்பான ஒன்பது சுவைகளில் சமனிலை என
ஒன்றும் உண்டு. அதாவது மனதால்
இன்பதுன்பங்

மேலும்

Pulavar Kalanthai Manian - சோட்டு வேதா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2018 5:12 pm

மனதில் நினைத்தவனை/நினைத்தவளை நினைத்து கொண்டே வாழ்கை முழுவதும் வாழ்வது
சாத்தியமா?

மேலும்

சாத்தியம். ஆனால் உண்மையான அன்பாக இருந்தால் மட்டும்.......... 09-Jul-2018 4:16 pm
அன்பு பாரபட்சம் பார்க்காது... அன்பின் நீளம், அகலம், ஆழம் எவரும் வரையறை செய்ய இயலாது... அன்பிற்கு பொறாமைப்படவோ, ஏமாற்றவோ தெரியாது... அன்பு சுவை கசப்பான சம்பவங்களால் ஒருபோதும் மாறிவிடாது... உண்மை அன்பு உங்களிடம் இருந்தால் அது பாசம், நேசம், காதல் எப்படியாயினும் வெளிப்படும்... அடக்கி வைக்க நினைத்தால் அன்பிடம் தோற்றுப்போவீர்கள்... 06-Jul-2018 6:16 pm
ellame arithu than yetti pidikum varai karuthirku nandri thozhi. 06-Jul-2018 3:44 pm
என் தனிமையை அவன் நினைவுகளுடன் கழிகிறது ...... அவன் நினைவின் சுவாசத்தால் என் உயிர் வாழ்கிறது தோழரே ! 06-Jul-2018 3:39 pm
Pulavar Kalanthai Manian - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2018 7:24 pm

திரு நிறை பொதிகை உடைய வேலி
திக்கெல்லாம் புகழும் நெல்வேலி
அருள்நிறை சிவனார் தந்த வேலி
அகிலம் புகழும் திருநெல்வேலி

காந்திமதி தாயார் அருளும் வேலி
கண்கவர் எழில்மிகு நெல்வேலி
பத்தமடை பாய் தந்த நெல்வேலி
பாபநாசம் தீர்த்தம் தரும் நெல்வேலி

ஆதிசிவன் ஆடும்சபை நெல்வேலி
ஆறு தாமிரபரணி ஓடும் நெல்வேலி
அச்சமில்லா வீரபூமி திருநெல்வேலி
அல்வாவில் புகழ் பெற்ற நெல்வேலி

கடமை உரிமை போராடும் நெல்லை
களங்கம் ஏதும் அறியாத நெல்லை
கனிம காடு வளங்களுடை நெல்லை
கற்றவர்க்கே பாடம்கூறும் நெல்லை

அன்புக்கே முதன்மைதரும் நெல்லை
அறிவுக்கே ஆசைப்படும் நெல்வேலி
சமயநல்லுறவு கொண்ட நெல்வேலி
சமத்துவம் போற்றும் திரு

மேலும்

Pulavar Kalanthai Manian - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

மேலும்

வாழ்வில் என்றும் இளமை கொண்டு அன்பும் பண்பும் எங்கும் பெற்று நட்பின் அருமை அன்பில் கண்டு உறவின் உண்மை நன்கு அறிந்து வாழ்க வாழ்க என வாழ்வாயாக. உன் நண்பனின் அன்பு மிகுந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 13-Jun-2019 2:28 pm
பிறந்த நாள் வாழ்த்து கவிதை எண்ணம் (subhashini5ae5abe0213d9) முதல் பரிசு பிறந்த நாள் வாழ்த்து கவிதை அன்னை இன் ஆசி (banu5adf10f68a453) முதல் பரிசு 29-Oct-2018 5:03 pm
யார் அந்த வெற்றியாளர் 12-Jun-2018 7:25 pm
முதல் பரிசு எவ்வாறு வெளிப்படுத்தப் படும்???? 21-May-2018 4:09 pm
மேலும்...
கருத்துகள்

மேலே