திக்கெல்லாம் புகழ் பெறும் திருநெல்வேலி

திரு நிறை பொதிகை உடைய வேலி
திக்கெல்லாம் புகழும் நெல்வேலி
அருள்நிறை சிவனார் தந்த வேலி
அகிலம் புகழும் திருநெல்வேலி

காந்திமதி தாயார் அருளும் வேலி
கண்கவர் எழில்மிகு நெல்வேலி
பத்தமடை பாய் தந்த நெல்வேலி
பாபநாசம் தீர்த்தம் தரும் நெல்வேலி

ஆதிசிவன் ஆடும்சபை நெல்வேலி
ஆறு தாமிரபரணி ஓடும் நெல்வேலி
அச்சமில்லா வீரபூமி திருநெல்வேலி
அல்வாவில் புகழ் பெற்ற நெல்வேலி

கடமை உரிமை போராடும் நெல்லை
களங்கம் ஏதும் அறியாத நெல்லை
கனிம காடு வளங்களுடை நெல்லை
கற்றவர்க்கே பாடம்கூறும் நெல்லை

அன்புக்கே முதன்மைதரும் நெல்லை
அறிவுக்கே ஆசைப்படும் நெல்வேலி
சமயநல்லுறவு கொண்ட நெல்வேலி
சமத்துவம் போற்றும் திருநெல்வேலி

புலவர் நரசிம்ம சுப்பிரமணியன்
சிறுமுகை.. கோவை மாவட்டம்.

எழுதியவர் : (27-Jun-18, 7:24 pm)
சேர்த்தது : Pulavar Kalanthai Manian
பார்வை : 66

மேலே