வாழ்க்கை

வாழ்க்கை
பெற்றவர் இட்ட பிச்சைதானோ
வாழ்க்கை
பரமேஸ்வரன் தந்த பாக்கியமோ
வாழ்க்கை
சுற்றமும் நட்பும் தந்த சுகந்தானோ
வாழ்க்கை
சுகதுக்கம் பகிர்ந்த சுந்தரி தானோ
வாழ்க்கை
விதிவசம் சிக்கிய விபரீதந்தானோ
வாழ்க்கை
வெந்ததைத்தின்றே சாவதுதானோ
வாழ்க்கை
அடைந்ததைப் போற்றும்
அற்புதமே அழிவில்லாத வாழ்க்கை.

எழுதியவர் : புலவர் களந்தை மணியன் (3-Jul-18, 8:35 pm)
சேர்த்தது : Pulavar Kalanthai Manian
Tanglish : vaazhkkai
பார்வை : 203

மேலே