சாதி
ஏ ! மானுடமே !
சாதிய உணர்வுகள் உனக்குத் தேவையா ?-அவை
சங்கடத்தைத் தர வில்லையா ?
சாதி என்பது பட்டமா ? இல்லை
கழுத்தில் கட்டிய அடையாள அட்டையா?
சமுதாயத்தில் சாதித்த
தலைவர்களுக்குச் சிலை வைத்தாய் சரி !
சாதிய தலைவர்களுக்கும் சிலை வைக்க வேண்டுமா ?
அங்கே சமத்துவம் தோன்றிடுமா ?
சிந்தித்துப் பார்த்தாயா ? மானுடமே !
போதித்து சாதித்த தலைவர்களுக்கு –இன்று
சாதி மூலாம் பூசுவது என்ன நியாயம் !
சிலைகளுக்குப் பின்னால் இருக்கும்
விலைமதிப்பற்ற கொள்கைகளை மறந்துவிட்டு
சாதியை மட்டும்
பிடித்துக் கொண்டு அலைவது ஏன் ?
சாதியின் பெயரால் புதிதாய் ஏதாவது
சரித்திரம் படைத்துவிடப் போகிறாயா ?
மனிதன் மனிதன் தானே ?- அதிலே
மாற்றங்கள் உண்டோ ?
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதை
உருவாக்கியவனும் மனிதன் தானே ?
தண்ணீரைக் குடித்துத் தாகத்தைத் தணிப்பவன் போல்
சாதியை படைத்து தன்னை உயர்தித்க் கொண்டவனை
உணர்ந்து கொண்டாயா மானுடனே ?
சாதியை பார்க்காதே ?மனிதனைப் பார் !
நீதியை மதித்து நீ நிம்மதியைத் தேடு !
மீதியை இந்த உலகமே பார்த்துக் கொள்ளும் !
அநீதியை அழித்து அன்பினை விதைக்கும் !