இனிமையான இல்லறம்
அவனும் அழகு..
அவளும் அழகு..
அவர்கள் இரு மனதும்
ஒரு மனதாகும்
திருமணமும் அழகு..
மேளங்கள் முழங்க..
மந்திரங்கள் ஒலிக்க..
அட்சதைகள் தூவ..
பெண்ணவளின் கழுத்தில்
தாலி கட்டுவதும் அழகு..
எங்கிருந்தோ வந்தாலும்
இனி நீ என்னவள்
என்றவன் எண்ணுவதும்
அழகு..
எங்கிருந்தோ வந்தாலும்
இனி உன்
நிழலாக நானிருப்பேன்
என்றவள்
எண்ணுவதும்
அழகு..
உறவுகளைப் பிரிந்து
அவள் உறங்காமல் தவிக்க
உனக்காக நானிருக்கிறேன்
என்றவன் உருகிச்
சொல்வதுவும் அழகு..
களைத்துப் போய் வந்தவன்
அசந்து அமர..
கொஞ்சம் கால்
அமுக்கிவிடவா..?
என்றவள் கேட்பதுவும்
அழகு..
தெரியாத சமையலை
தெரிந்தவள் சமைத்து
பசியோடு வந்தவனுக்கு
பறிமாறுவதும் அழகு..
ருசியில்லா உணவை
விரும்பி அவன் ருசித்து
சலிக்காத முகத்தோடு
சாப்பிடுவதும் அழகு..
காய்ச்சலில் அவள்
கண் மூடிகிடக்க
கஞ்சி வைத்து தரட்டுமா..?
என்றவன் கேட்பதுவும்
அழகு..
காய்ச்சல் வந்த போதும்
அவன் களைப்பை போக்க
காபி போட்டுத் தரட்டுமா..?
என்றவள் கேட்பதுவும்
அழகு..
தீபாவளிக் கொண்டாட
உங்க அம்மா வீட்டுக்கு
போகலாமா? என்றவன் கேட்பதுவும்
அழகு..
தீபாவளிக்கு அடுத்த நாள்
அத்தையும் மாமாவையும்
பார்க்க போகலாமா?
என்றவள் கேட்பதுவும்
அழகு..
அவனும் அழகு..
அவளும் அழகு..