Pulavar Kalanthai Manian- கருத்துகள்

கோபம் மிகவும் மோசமான குணங்களில் ஒன்று. தீய குணங்கள் அதிகம் தீமையைத் தான் தரும் என நாம் அறிந்ததால் தான் இக்கேள்வியே எழுந்துள்ளது. மனைவி மீது
கோபம் வந்தால் அங்கே அவளை காதலியாக எண்ணிப்பாருங்கள்.கோபம்
மறையும்.மகன்மீது கோபம் வந்தால் அவனை நம் தந்தையாகவும்..மகள் மீது
கோபம் வந்தால் தாயாகவும் மானசீகமாக எண்ணுங்கள்.கோபமும் பாசமாகும்.நேசமாகி இன்பம் பெருகக் காரணமாகும்.
புலவர் களந்தை மணியன்.. சிறுமுகை

பல நிஜ நினைவுகளும்..நடைபெறாத நடக்க வாய்ப்பே இல்லாத ஏக்க ஆசைகளும் கனவுகளாக வரும்.இவை நம்பக்கூடாது கனவுகள். தொடர் முயற்சியின் தாக்கத்தால் நமது லட்சியங்கள் கனவாக வந்தால் கனவை நம்பி காரியத்தை தொடரலாம்.

பலனை எதிர்பார்க்காமல் ஆசைப்பட்டுப்
பாசம் காட்டும் அக்கறை உணர்வே தூய்மையான அன்பாகும்.
பலனை எதிர்பார்த்து உள்ளொன்று மற்றும் புறமொன்று காட்டும் பசப்புதலே
கபடம் நிறைந்த ஆசையாகும்.
உண்மையான நடிப்பைக் கண்டுவிட்டபோதிலும் நடிப்பை உண்மை
என்று நம்பவே மாட்டான் புத்திசாலி.
புலவர் களந்தை மணியன்.. சிறுமுகை

வாழ்க்கை என்பதை இரண்டாகப்பிரித்தால்...ஒன்று கனவு வாழ்க்கை... மற்றொன்று நனவு வாழ்க்கை.
நனவு வாழ்க்கையில் ஒருவர் பிரவேசித்தபின் மனதுக்குள் ஒருவரையொருவர் எண்ணி வாழ்வத காதல் ஆகாது. அது காதலின் துரோகம்.

பிராமணர்கள் தங்களை பெரிதாகச் சொல்லி ஏதும் இல்லை. பிறர்தான் பிராமணர்..பிராமணரல்லாதார் என்று சொல்கிறார்கள். அரசும் போற்றவில்லை.
இன ஒதுக்கீடும் இல்லை. ஓசி இனம் எனக்கூறி ஓசியில் எதுவும் தருவதில்லை.
உண்மையும் உழைப்பும்தான் அவர்களுக்குத்துணை. இதுவும் நாடே அறிந்த இரகசிம்தான்.

வணக்கம். நமது மொழிக்கே உரிய சிறப்பிற்கு ழகரம் ஒரு காரணம். லகரம்..ளகரம்..ழகரம் என்பதால் இவை குறில்கள். இவை இடையினம் சார்ந்தவை என்பதால் மொழிக்கு முதலில் வராது. ல்..ள் மெய்கள் க..ச..ப..என்றவல்லினங்களுக்கு இடையே வரும் என தொல்காப்பிய விதி உள்ளது.
ல்.ள் ..உடன் யகர..வகரங்களும் வரும்.
நமது சிறப்பு ழகரத்தின்முன் க..ச..த..ப..ஞ..ந..ம..ய..வ ஆகியன வரும்.


Pulavar Kalanthai Manian கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே