மழையில் நாம்
மழையில் உன்னோடு ஆடும்
குறும்பு ஆட்டங்களுக்கு பின்
உன் நனைந்த சீலை உலர்கையில்
நானும் உலர்ந்து சுருக்காக
சுருங்கிக் கொள்வேன்
உன் மடியிலேயே கிடத்திக்கொள்
உன் மூச்சிக் காற்றில்
குளிர் ஆடையை களைந்து
உன் வெப்ப காற்றில் தென்றல் தேடுவேன்
உன் பச்சை நரம்புகளால்
என்னை உரசிக்கொள்
இனி பசுமைகள் காணா உன்
கூந்தல் குடையில் வசித்து விடுகிறேன்