தவறிய பாதை

நிறைய தூரம் வந்துவிட்டேன்
தவறியது எங்கென்று ஏதும் அறியேன்
இத்தனை தூர பயணத்தில்
எத்தனையோ ஏணிகலேறி
எத்தனையோ நாகங்கள் தீண்டி
தொடங்கிய இடத்திலே மீண்டும் தொடங்கி
தொலைத்த இடத்திலேயே மீண்டும் எடுத்து
தொலைந்த இடத்திலே மீண்டு எழுந்து
இலக்கு இதுவென எண்ணிவந்தேன்
எட்டிய கணம் துல்லிய மனம்
நீடித்த இருப்பில்
நிதர்சனம் உணர
தவறிய பாதை தேடும் கண்கள்......

சட்டெனெ மடிந்து விழும் மனம்...
அய்யகோ...இத்தனை தூரம் எப்படி கடப்பேன்..
எங்கு தவறியதோ நானறியேன்...

யாதொரு தினத்தின் இரவிலோ
அதடுத்து வந்த பகலிலோ
என் மழலையின் சொல்லிலோ
மனையாளின் அணைப்பிலோ
தொழிலின் முனைப்பிலோ
தோழனின் துடிப்பிலோ......
கண்ட காட்சிகளிலோ.....
ஏறிய ஊர்தியிலோ...
எதிராமர்ந்திருந்த சகபயணியிலோ..
இறங்கிய தளத்திலோ...
சேர்க்க வேண்டிய வளத்திலோ..
எங்கு தவறியதோ நானறியேன்...


நிறைய தூரம் வந்துவிட்டேன்......
பாதை...தவறியே.....
இத்தனை தூரம் எப்படி கடப்பேன்....

எழுதியவர் : இளவேனில் (2-Jul-18, 2:53 pm)
சேர்த்தது : இளவரசன் கி
Tanglish : thavariya paathai
பார்வை : 164

சிறந்த கவிதைகள்

மேலே