காதல்

முற்றத்தில் வந்து நின்றாள்
அவன் வரவை எதிர்நோக்கி
அழகு பதுமையாய்-புன்னகையை
பேராபரணமாய் அணிந்து,
வாசநறுமலர் மல்லிகைபூச்செண்டு
வாரிபின்னிய கூந்தலுக்கு மற்றோர்
ஆபரணமாய்; காத்திருந்தவன்
காணவில்லை , மனம் தொய்ய
வேதனையால் வானை நோக்கினாள்;
அங்கு அவளுக்கு ஆதரவாய்
அழகு நிலா, நீலவானில் பவனிவர,
நிலவிடம் பேசினாள் ,' தலைவன்
இன்னும் வரவில்லையே நீ எனக்கு
தூது சென்றிடமாட்டாயா நிலவே'
என்று கூறி; நிலவும் அவனைக் கண்டால்
'நீ காத்திருக்கிறாய்' என்று கூறுவேன்
என்று சொல்லி வானில் தன பயணம் தொடர/

மங்கை அவள் கண்களில் தூக்கம் தழுவ
துக்கம் தலைக்கேற நின்றபோது
இரவும் போய், நிலவும் போய்
இளங்காலைபொழுது வந்தது சேவல் கூவ
குயில் பாட; இளவேனிற்கால தென்றல்
மெல்ல வந்து மங்கையை அணைத்து தன்
மடியில் இருத்தி, தாய்போல் தாலாட்டுப் பாடி
தூங்கவைத்தது, அவளும் அதன் அரவணைப்பில்
தூங்கிவிட்டாள்; விழித்துக்கொண்டபோது
அவள் அவன் மடியில் , அவன் கைகள் அவள்
தலையைக்கோதிவிட...........
உருவமில்லா தென்றல் அங்கு நின்று
அதைக்கண்டு ஆனந்திக்க ..............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jul-18, 8:01 am)
Tanglish : kaadhal
பார்வை : 305

மேலே