தோழியே காதலியானால்
பல்லவி:
இது வரையில் இயலபாக சென்ற
என்னோட கால்கள்
இடம் மாறி தடம்மாறி போகிறதே
இது வரையில் இயல்பாக சுத்தும்
கடிகார முள்ளும்
கடிகாரம் விட்டு வெளியே குதித்து ஓடியதே
சத்தமின்றி உள்ளே துடித்த
இதயம் கூட இறங்கி வந்து
உன்னை கேட்டு
கத்தி கதறி துடிக்கிறதே
தொனதொன வென பேசிய உதடும்
அச்சம் மடம் நாணம் கொண்டு
வேலை நிறுத்தம் செய்கிறதே
தோழியாய் தோலில் சாய்ந்தால்
புன்னகை மட்டும் எட்டி பார்க்கும்
காதலியாய் சற்றே நினைத்தால்
பூகம்பம் வந்து வெட்டி சாய்க்கும்
தோழியே காதலியானால்
ஏழு ஜென்மம் தேவையில்லை
நட்போடு காதல் கலந்தால்
சாகா வரமும் போதவில்லை
(இதுவரையில்)
ந.சத்யா