அசை போடும் மனது
மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தவிக்கிறேன் நான்
மழுங்கி மண்ணில் கிடந்து
மறையும் இரும்பு போல்
என்னிலும் இக் காதல்
ஒழிந்து விடாதா
என நான் நினைக் கையில்
பாழாய்ப் போன
என் மனது தான்
விட்டு விட்டு
அவள் பசுமை நினைவுகளை
அசை போட்டு அசை போட்டு
என்னைப் படாதபாடு
படுத்திக் கொண்டிருக்கிறது ..
அஷ்றப் அலி