கொடிது
சேயாய் பிறந்து
......செம்மையை வளர்ந்து
வாளிப்பான வாலிபத்தில்
......வல்லமை பல செய்து
சீராட்டி பாராட்டி
......பிள்ளைகளை வளர்த்து
நிற்காமல் நித்திரைகொள்ளாமல்
......நிலையில்லா செல்வதை தேடி சேர்த்து
வீடு, மனை, மக்கள் அனைவரையும்
......பேணி காத்து
கடமைகளை ஆற்றிவிட்டு
......கடைசி காலத்தில்
......கற்ற அனுபவத்தை
......கற்பிக்க ஆளில்லாமல்
உள்ளத்து அன்பை
......உடையவரிடம் பகிர முடியாமல்
அகண்ட அகிலத்தில்
......அன்னமிட ஆளில்லாமல்
அனாதையாய் மடியும்
.....மனிதனின் முதுமை கொடிது !!!!!!!
-கலைப்பிரியை