வலி யாரறிவார்

இருமனமிணைந்து
ரசித்துப் புணர்ந்துமிழும்
நுனி நஞ்சில்
உதிக்க இருக்கும்
சூரியனோ நிலவோ
அறியுமா அது நஞ்சென்று, நன்றி அக்கா

நஞ்சென் றுணர்ந்தும்
என்றோ உதிக்கும்
சூரிய வெப்பமோ
மறையும் நிலவின்
அழகையோ
உணராத மனம்,
புடைக்கும் வயிறை
புடவை கொண்டு
மறைக்க,

மறைந்து மோப்பமிடும்
நாய்க்குத் தெரியுமா,
நிலவினிடை சுமந்து
செல்லும் வலியின்
கனத்தை,

இல்லை குடமுடைந்து
குமுறும் குருதி
வெப்பத்தோடு
வெளிவிழும் நஞ்சின்
உயிரை யுணர்ந்து,
நகைக்கும் நிலவின்
புறஇதழ் அறியுமோ
சுமை வலியை,

யாரறிவார் நிலவின்
வலியை,
கூச்சல் இல்லாமல்
நறுமுகை மலர,
சூரிய நுனியுமிழும்
நஞ்சு பாய்ந்து செல்லும்
துளையறியுமோ,
நிலவு சுமந்து திரிந்த
நஞ்சின் வலியை,

ஏன்? பாலின
வேறுபாடறிந்து
படைத்த பிரம்மன்
அறிவாரோ தன்னைப்
படைத்த நிலவின்
வலியை!

ஓகோ
உணர்கிறோம்
உணர்கிறோம்
படைத்த பிரம்மனும்
வலியறியாத
சூரியக்குடும்பத்தை
சார்ந்தோரேயென்று!

பி.கு : சூரியன் - ஆண்; நிலவு - பெண்

எழுதியவர் : தமிழினியன் (4-Jul-18, 6:09 pm)
சேர்த்தது : தமிழினியன்
Tanglish : vali yaararivaar
பார்வை : 2630

மேலே