நேரிசை வெண்பா-கவிஞனின் காதல்
புலனத்தின் குழு ஒன்றில், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்துக்கு, ஒரு தமிழ் மூதறிஞர், வெண்பா வித்தகர், வார்த்தைச் சித்தர் ஒருவர், அப்படத்திற்கு ஒரு நேரிசை வெண்பா எழுதுக என விண்ணப்பித்திருந்தார். அனேக கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். கொடுத்த படத்துக்கு ஏற்ப எழுதிய வெண்பா.
கவிஞனின் காதல்=4
==================
கவிதை எழுதக் கருவாக வந்தாய்
கவிஞரின் நெஞ்சைக் குலைத்தாய் - புவிதனில்
உன்னழகுக் கின்னோர் உவமையும் இல்லையே
நின்னையே சுற்றுமே நெஞ்சு