ஒரு விகற்ப நேரிசை வெண்பா-வாட்ஸ் அப் வஞ்சி
புலனத்தின் குழு ஒன்றில், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்துக்கு, ஒரு தமிழ் மூதறிஞர், வெண்பா வித்தகர், வார்த்தைச் சித்தர் ஒருவர், அப்படத்திற்கு ஒரு நேரிசை வெண்பா எழுதுக என விண்ணப்பித்திருந்தார். அனேக கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். கொடுத்த படத்துக்கு ஏற்ப எழுதிய வெண்பா.
வாட்ஸ் அப் வஞ்சி=5
===================
மஞ்சள் முகமாய் மலரவே வாட்ஸ்அப்பில்
தஞ்சம் கொடுத்தவொரு தாரகை.! - வஞ்சியவள்
கொஞ்ச அழைப்பாள் கவிஞனின் வெண்பாவால்
நெஞ்சம் நிரைந்த நினைவு.!
======================================
குறிப்பு:: வாட்ஸ் அப் என்பது தூய தமிழ் இல்லையாயினும் வெண்பாவில் படத்துக்குப் பொருத்தமாய் வருதற்கு ஏற்ப அவ்வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறேன்.