நேரிசை வெண்பா-காதல் பித்தன்
புலனத்தின் குழு ஒன்றில், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்துக்கு, ஒரு தமிழ் மூதறிஞர், வெண்பா வித்தகர், வார்த்தைச் சித்தர் ஒருவர், அப்படத்திற்கு ஒரு நேரிசை வெண்பா எழுதுக என விண்ணப்பித்திருந்தார். அனேக கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். கொடுத்த படத்துக்கு ஏற்ப எழுதிய வெண்பா.
காதல் பித்தன்=3
===============
எத்தனை காலமும் ஏமாற வைத்தாயே
பித்தனைப் போலப் பிதற்றுகிறேன்.! - தத்தளிக்கும்
உள்ளத்தில் தள்ளாடும் உன்னையே நோக்குகிறேன்.!
தள்ளி விடாதே தவிர்த்து.!
*நேரிசை வெண்பா*