நேரிசை வெண்பா-அழகு ஆபத்து

புலனத்தின் குழு ஒன்றில், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்துக்கு, ஒரு தமிழ் மூதறிஞர், வெண்பா வித்தகர், வார்த்தைச் சித்தர் ஒருவர், அப்படத்திற்கு ஒரு நேரிசை வெண்பா எழுதுக என விண்ணப்பித்திருந்தார். அனேக கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். என்னுடைய வெண்பா.


அழகு ஆபத்து=2
==============

அந்தி சிவக்கும் அவளழகின் முன்பாக!

சந்திரனும் தன்தலைச் சாயுமே - இந்திரன்

கண்பட்டு விட்டால் களவாடிச் செல்வானாம்!

எண்ணம் வருமாம் எளிது!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (6-Jul-18, 12:34 pm)
பார்வை : 73

மேலே