அன்பும் அறனும் பண்பும் பயனும்

கனாக்காலம் முடிந்து
நனாக்காலம் துவங்கி ஆனது
இருபத்தைந்தாண்டுகள்...
அன்போடும் அறனோடும்
பண்போடும் பயனோடும்
எழுதப்படும் இனிய
இல்லற காவியத்தின்
தலைவன்.. தலைவி...
திருமதி & திருவாளர்
வெங்கடேசன் தம்பதியர்
வாழ்க பல்லாண்டு
வளங்கள் எல்லாம் பெற்று...

கடந்தது காதலுடன்
கால் நூற்றாண்டு...
தனக்கென்று வாழ்வது கொஞ்சம்
துணைக்கென்று வாழும் நெஞ்சம்
என வாழும் இவர்களின்
வாழ்வு சதாபிஷேகம் கடந்தும்
கால்நூற்றாண்டு காணட்டும்.

நீவிர் நல்ல மனதுக்கு
சொந்தக்காரர்...
உமை வாழ்த்துகையில்
உள்ளம் உவகை கொள்கிறது...
எல்லோரும் உமைப்போல்
இப்பூவலகில் இருந்துவிட்டால்
சொர்க்கத்தை வேறெங்கும்
தேடவேண்டியதில்லை...
எழுத்துக்கள் எல்லாம்
உமைப்போன்றோரை
வாழ்த்துவதற்கு பிறந்தனவோ...
மாலைகள் பூக்களால் மட்டும்
தொடுக்கப் படுவதில்லை...

இதயங்கள் எழுதும்
மெல்லிய உணர்வில்
பூக்கும் கவிதைகளெல்லாம்
இதய வாசல்களின்
வண்ணக் கோலங்கள்...
இன்றும் என்றும்
அது தொடரட்டும்...

பூக்களுக்கு மட்டுமல்ல
இதயங்களுக்கும்
வாசம் உண்டு.. எனக்
கண்டு தெளிந்த
திருமண நாள் இது...
வசந்தங்கள் தொட்டு
நாட்கள் நகரட்டும்...

வாழ்த்துக்களோடு
அன்பன்...
ஆர். சுந்தரராஜன்.
😀👍🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (7-Jul-18, 7:24 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 511

மேலே