அவளுக்கு என் காதல் தூது
முனிவரின் மௌனம் மோனம்
பெண்ணே உன் மௌனத்தில்
என் காதல் தூதிற்கு நீ தரும்
சம்மதமோ அர்த்தம் என்று
நான் சொல்வேன் ,இதைக் கேட்டும்
உன் மௌனம் கலையவில்லையே
என்ன என் தூது உன்னையும்
முனிவராக்கியதோ மோன நிலைக்கு
எடுத்து செல்ல.என்று நான் மீண்டும்
இரைந்து சொல்ல,சிலையாய் இருந்த
அவள் பேசும் சிலையாய் மோனலிசா
சிரிப்பு உதிர்த்து மௌனம் களைந்தாள்
என் நெஞ்சில் ஈரம் வார்த்தாள் தன்
சம்மதம் தந்து காதலாய் என் கனவை
நெனவாக்கி என்னைக் காதலனாய் ஏற்று
அன்பே அருகே வரலாமே என்றழைத்து .