ஒப்பாரிப் பூக்கள்...

தினம் உன் கூந்தலேறும்
பூக்களிடம் அந்தச் செடி
கூறும் உன்னைப் பற்றிய
பிரமிப்புக் கதைகளை
கேட்டுக் கேட்டே வளர்ந்த
மொட்டு மலர்ந்து கிடக்கிறது...

பாவம் நீ பூப் பறிக்கா
ஞாயிறு, ஞாலத்தில்
பூக்களுக்கு மட்டும்
சாபமாய்மாறியதை
அறியாது
ஒப்பாரி வைத்தே
உயிர் வாடும் அந்தப்
பூக்களை எண்ணி
கலங்குகிறேன்-நான்
உன்னை என்
மார்பில் சூடியவாறு...
~*~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 11:13 am)
பார்வை : 49

மேலே