நெகிழியே நெகிழியே கொள்ளாதே

நெகிழியே கொள்ளாதே
எங்கு கண்டினும் நீ உள்ளாய்
எப்படி வந்தாயோ ?
நிரந்தரமாக இங்கேயே இருக்க வந்தாயோ
உன்னை அழிக்க முயன்று முயன்று வெறுத்தோடி போனோமே
உன்னை அழகு அழகா சோடிச்சு கொலு பொம்மையா வைக்கையில்
தூக்கு போசியில் கொண்டு போன சோறு இன்று நெகிழியே
உனது உருவாக்கத்தில் ஒரு கைஅடக்கத்தில் கிடைத்த பொருட்களில்
கை ஏந்தி புடிச்ச தண்ணி கை நிறைய குடிச்ச தண்ணி
இன்று ஏனோ உனது உருவாக்கத்தில் கிடைத்த வண்ண மயமான உனது குடுவைகளில்
செம்பும் பித்தளையும் இருந்த இடத்தில் ஏனோ நீ நிரம்பிவிட்டாய் மளிகை பொருட்கள் நிரப்பி வைக்க
எங்கு சென்றாலும் உன் மையம்
விழிக்கும் போதும் உன் முகத்தில்
கண் மூடும் போதும் உன் முகத்தில்
ஏன் இந்த கொடூரம்
அரக்கனாய் நீ
மறைமுகமாய் வந்த சாத்தனாய் நீ
உன் தீங்கு தெரிந்தும் வெள்ளந்தியாய் மக்கள்
இந்த வெள்ளந்திகளால் பாவம் மற்ற உயிர்கள்
நெருப்பு என்றதும் வேன்றுமென்றே விரல் வைக்கும் மாக்களாய் நாம்
நெகிழியே உன்னால் நன்மை நன்மை என்றோமே
நீ ஒரு உயிர்கொல்லி என்று தெரியாமல்
நெகிழியே இனியாவது செல்வாயோ
தூய்மையான இயற்கையாக

எழுதியவர் : பிரகதி (12-Jul-18, 3:21 pm)
பார்வை : 153

மேலே