மோகப் பிரளயம்...

அலை அலையாய்
நீ அலைவதனால்
நான் முத்தெடுக்க
மூழ்கிப்போனேன்...

கடலென்ன கடலென்று
உன் கடவாய் கொண்ட
முத்துக்களை
நான் மூச்சுகொண்டு
வருடுகின்றேன்...

என் இளமையெல்லாம்
இளைத்தெடுத்து...

அதை உன் அழகோடு
கோர்த்தெடுத்து...

என்னவளே...

உன் சமைந்த
தேகத்தில்
சரளமாய்
தமிழ்பேசும்
உன் சங்குக்
கழுத்தூதி...

காற்றுமட்டும்
வெளியெடுத்து...
அதில்
நாணத்தைப்
பிரித்தெடுத்து...

பிரளயப்
பொழுதுகளாய்
நாம் புரண்டெழுந்த
கதையெழுத...

கனவு மட்டும்
போதுமோடி...?!

என்னுயிரே
நீ என் கருந்தோலில்
களவுபோன
பொழுதெழுத...
இரவுருக்கி
எடுத்தாலும்
மை
உன் இமைக்கே
போதாதடியே...

~☆~

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 💐💐💐🙏

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (13-Jul-18, 5:35 pm)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 51

மேலே