அவன் கண்ணியமும் என் காதலும்
தாயாய் தோழியாய்
அவனை ஆண்டுக்கொண்டிருந்த எனது பெண்மை........
முதல் முறையாய்
அவன் அருகாமையில் தன்னை இழந்து கொண்டிருந்தது.....
விழி நோக்க தயங்கி.......
விரல் கோர்க்க பயந்து........
எட்டி நின்றேன் என்னவனிடம் இருந்து!
என்னை புரிந்து கொண்டவனாய்
என்னருகில் வந்தான்
சலனம் இல்ல பார்வை
கள்ளமில்ல அணைப்பில்
என்னை தன்னிலை படுத்தினான்......
அவன் என்னவன் இல்லை என்று தெரிந்தும்
காதலித்து கொண்டிருக்கிறேன்
அவனின் ஆண்மை தொனிக்கும் கண்ணியத்தை......!