ஸ்நேக் டான்ஸ்
எலி விழுங்கிய பாம்பு ஊர்ந்தோட
துரத்திய கழுகு காலில் கவ்வ
வேடன் அம்பு கழுகை வீழ்த்த
பிடி நழுவி பாம்பு தப்பியோட
எலி பாம்பிற்கு இரையானது
கழுகு வேடனுக்கு இரையானது
பாம்பாட்டி வந்து மகுடி ஊத
இறையெடுத்த பாம்பு
ஆடமுடியாமல் ஆடி சுருண்டு விழுந்தது !
பாம்பாட்டி பாம்பை பெட்டியில் அடைத்து
கிராமத்து தெரு நோக்கி நடந்தான்
சிறுது நேரத்தில் ஸ்நேக் டான்ஸ்
கண்டு களியுங்கள் !
INSPIRATION ---வாசவனின் எலி பாம்பு ஹைக்கூ