மழை இரவு

மழை இரவு !
கவிதை by :கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

மழையே மழையே
மகிழ்ந்து மகிழ்ந்து
குழந்தைபோல் விளையாட
விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஏணி அமைக்க வா !

மழையே மழையே
பகலவன் சூடு தணிய
விண்ணில் விளையாடும்
கருமேகமே மழைத்துளிகளை
மண்ணுக்கு மலர்போல்
இரவில் அள்ளி வீசு !

மழையே அந்தி மழையே
விண்ணில் சிந்து பாடி
மண்ணில் நொந்த உயிர்கள்
மகிழ்ந்து வாழ – நீ
மண்ணில் வந்து விளையாடு !

மழையே இரவு மழையே
மண்ணில் நீ வீழ்ந்தால்
மரம் செடிகொடிகள்
மகிழ்ந்து தலையாட்டும்
விண்ணில் தோன்றும்
முழுநிலவு மறைந்து
நின்று குடை பிடிக்கும் !

இரவில்
பெய்யும் மழைத்துளிகள்
ஏழையின் குடிசையில்
தலையாட்டும் மண்பானையில்
இனிய ஜலதரங்கம்
விடிய விடிய இசைக்கும் !

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (15-Jul-18, 3:41 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : mazhai iravu
பார்வை : 475

மேலே