விவசாயம்

ஏ புள்ள என்ன மச்சான்
வா புள்ள எங்க மச்சான்
தென்ன மரத்தோப்புக்குள்ள
தன்னந்தனிமையிலே
குச்சிவீடு கட்டிக்கிட்டு
கொழந்த குட்டி பெத்துக்கிட்டு

ஏ மச்சான் என்ன புள்ள
வா மச்சான் எங்க புள்ள
வெவசாயம் பாத்து க் கிட்டு
வௌ நெலத்த சேத்துக்கிட்டு
புள்ளகள படிக்க வச்சு
புது வாழ்க்க தொடங்கிடுவோம்

ஏ புள்ள என்ன மச்சான்
போ புள்ள எங்க மச்சான்
மழ மேகம் காங்கலியே
மண்வெட்டிக்கு வேல இல்ல
வெள்ளாம பொய்த்து ப்போச்சு
வெடிச்சுக்கெடக்கு நெலங்களெல்லாம்

ஏ மச்சான் என்ன புள்ள
வா மச்சான் எங்க புள்ள
மரங்கள நாம் நட்டு வைப்போம்
மழ மேகம் தானா வரும்
கண் கலங்கி நிக்காதீக
கைகோத்து பாடு படுவோம்
வீட்டுக்கொரு மரம் வளத்து
வானத்தையே குளிர வைப்போம்

ஏ புள்ள என்ன மச்சான்
வா புள்ள எங்க மச்சான்
அடி வாடீ புள்ள
by
Dr.A.P.Sathya Swaroop

எழுதியவர் : Dr.A.P.SathyaSwaroop (16-Jul-18, 11:00 am)
சேர்த்தது : sathyaswaroop
பார்வை : 84

மேலே